விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!

Bookmark and Share

விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!

பிரபல மாடல் அழகி சோனிகா சிங் சௌஹான் கொல்கத்தாவில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். அவருடன் காரில் சென்ற நடிகர் விக்ரம் சாட்டர்ஜி பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ராஷ்பேஹரி பகுதியில் நடந்தது.

அதிகாலையில் மிக வேகத்துடன் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதியதாகவும், பின்னர் அருகிலிருந்த கடைகுள் புகுந்து நசுங்கியதாகவும் விபத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நசுங்கிய காரிலிருந்து இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தபோது, சோனிகா சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பலத்த அடிபட்ட விக்ரம் சாட்டர்ஜிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

குடிபோதையில் விக்ரம் சாட்டர்ஜி காரை ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்ரம் சாட்டர்ஜி வங்காள, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!
படம் ரிலீஸ் ஆகற வரைக்கும் உன் ஓட்ட வாயை மூடிட்டு இரு - பிரபல நடிகரை திட்டிய பிரம்மாண்ட இயக்குனர்.!
தீரனை பாராட்டிய சங்கர்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions