ஹீரோக்களை ஓவர்டேக் செய்யும் சூரி!

Bookmark and Share

ஹீரோக்களை ஓவர்டேக் செய்யும் சூரி!

சந்தானம் ஹீரோவாகி விட்டதால், தற்போது விஜய், சூர்யா வரை எட்டிபிடித்து விட்டார் சூரி. அதோடு தற்போது சிங்கம்புலி, சிங்கம்முத்து, பாலசரவணன், சதீஷ் என பல காமெடியன்கள் களத்தில் இருந்தபோதும் அவர்களில் முதன்மையானவராக சூரிதான் இருக்கிறார்.

அவருக்கென்று ஒரு வியாபாரம் உள்ளதால் மார்க்கெட் இல்லாத இரண்டாம் தட்டு ஹீரோக்கள் பலர் சூரியை நம்பித்தான் உள்ளனர். அதோடு, சில ஹீரோக்கள் தங்களை விட அவர் அதிகமான காட்சிகளில் வந்து, அதிகமான டயலாக் பேசினால்தான் எடுபடும் என்பதால் தாங்களாகவே அவருக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கின்றனர்.

விளைவு, இப்போது மார்க்கெட் இருக்கிற ஹீரோக்களின் படங்களில் நடிக்கும்போதும் அவர்களை ஓவர்டேக் செய்யும் வகையில் நடிக்கிறாராம் சூரி. அதன்காரணமாக, டைரக்டர்கள் தனக்கு சரியான டயலாக் கொடுக்காதபோதும், தனக்கான டயலாக்குகளை தானே அதிகப்படியாக சேர்த்துக்கொண்டு நடிக்கிறாராம் சூரி.

இதனால் இரண்டு பிரபல ஹீரோக்கள் சூரி மீது அதிருப்தியில் இருப்பதோடு தங்களது அடுத்தடுத்த படங்களில் அவருக்கு கல்தா கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions