ஹீரோவாக நடிக்க மறுத்த சூரி!

Bookmark and Share

ஹீரோவாக நடிக்க மறுத்த  சூரி!

கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், பிரேம்ஜி என பல காமெடியன்கள் ஹீரோவாகிவிட்டனர். காமெடியன்கள் ஹீரோவாகிக்கொண்டிருக்கும் காலம் இது.  மேலும், சிங்கம்புலி, தம்பி ராமைய்யா போன்ற காமெடியன்கள் தங்களது வயதுக்கு ஹீரோவாக நடிக்க முடியாது என்பதால், குணசித்ர நடிகர்களாகிக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அதிக படங்களில் காமெடியனாக நடித்து வரும் சூரியையும் ஹீரோவாக்க ஒரு முயற்சி நடந்து வருகிறதாம்.  

தெலுங்கில் உருவான மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்கான வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஹீரோவானதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு டைரக்டர், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தின் சிடியை சூரிக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு, அந்த கதை பிடித்திருந்தால் உங்களை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க தயாரிப்பாளரும் ரெடியாகயிருக்கிறார். படத்திற்கு 4 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்றாராம். ஆனால், அந்த சிடியை பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டாராம் சூரி.

காரணம் கேட்டவர்களிடம், இப்போது எனக்கு ஹீரோவாக நடிக்கவோ, சிடி பார்க்கவோ நேரமே இல்லை. காமெடியனாக நடிக்கவே நேரம் போதுமானதாக உள்ளது என்று கூறிவிட்டாராம். அதனால் இப்போது சூரி நடிக்க மறுத்த அந்த தெலுங்கு பட சிடி வேறு சில காமெடியன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions