டைரி போட்டு காமெடி சீன் எழுதும் சூரி!

Bookmark and Share

டைரி போட்டு காமெடி சீன் எழுதும் சூரி!

சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த புரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி, இப்போதுவரை சுசீந்திரனின் அனைத்து படங்களிலும் இடம்பிடித்து வருகிறார்.

அதிலும் சமீபகாலமாக அவர் மதுரை பக்கமாக சென்று விட்டதால் தானும் மதுரைக்காரன் என்பதால் சூரிக்கு ரொம்ப வசதியாகி விட்டது. அந்த ஏரியா காமெடிகள் மட்டுமின்றி அங்குள்ள இளவட்டங்கள் அதிகமாக பேசும் நக்கல் நையாண்டி கலந்த வார்த்தைகளையும் அதிகமாக பேசி நடித்து வருகிறார்.

மேலும், சிவகார்த்திகேயன், விமல், விதார்த் போன்ற நடிகர்களின் படங்களில் அதிகமாக நடித்து வந்த சூரி, இப்போது அஜித், சிம்பு, ஜெயம்ரவி என அடுத்த லெவல் நடிகர்களுடனும் நடிக்கத் தொடங்கி விட்டார்.

அதோடு, சந்தானம் மார்க்கெட்டில் இல்லாத இந்த நேரத்தில் சரியான காமெடி காட்சிகளில் நடித்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார் சூரி.

அதன்காரணமாக, தற்போது தனக்கென ஒரு காமெடி டீமை உருவாக்கியபோதும், தான் படப்பிடிப்புகளில் நடித்துக்கொண்டிருக்கும்போது தனக்கு தோன்றும் காமெடி காட்சிகளை ஒரு டைரி போட்டு எழுதி வைத்து வருகிறாராம் சூரி. அப்படி எழுதுவதை பின்னர் தனது காமெடி இலாகாவிடம் கொடுத்து இன்னும் டெவலப் பண்ண சொல்கிறாராம்.


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions