விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கி விற்காதீர்கள்: நடிகர் சூரி பேட்டி

Bookmark and Share

விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கி விற்காதீர்கள்: நடிகர் சூரி பேட்டி

கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணனின் இல்லத் திருமண விழா தஞ்சை மாவட்டம் துறவிக்காட்டு கிராமத்தில் நடந்தது. முதல் நாள் பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதைத்தொடர்ந்து நடந்த திருமண விழாவில் நடிகர்கள் சசிகுமார், சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சூரி பேசும்போது கூறியதாவது:–

“இயக்குனர் சரவணன் நினைத்திருந்தால் இந்த விழாவை சென்னையில் இதைவிட பிரமாண்டமாக நடத்தி இருக்க முடியும். ஆனால், தான் பிறந்த சொந்த மண்ணில் குடும்ப விழாவை நடத்துவதுதான் சரியானது என்பதை உணர்ந்து அவர் இந்த கிராமத்தில் இவ்வளவு மக்கள் மத்தியில் நடத்தி இருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் இது. இங்கிருக்கும் பசுமையையும் செழிப்பையும் பார்க்கிற போது கேரளாவின் அழகை விஞ்சி விடுவது போலிருக்கிறது. இந்த வயலையும் விவசாயத்தையும் இப்படியே தொடருங்கள். தயவு செய்து விவசாய வயலில் கல் நட்டு வீட்டுமனையாக்கி விடாதீர்கள்.

நான் இதுவரை 60 படங்களில் நடித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த படம் என்ன என்று என்னைத் தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட வெண்ணிலா கபடி குழு, கத்துக்குட்டி இரண்டு படங்களையும்தான் சொல்வேன். கத்துக்குட்டி படத்தை பக்கா கமர்ஷியல் படமாக செய்திருக்கலாம். ஆனால், இயக்குனர் சரவணன் அதனை மண்ணுக்கான படமாக எடுத்தார்.

மீத்தேன் திட்டத்தின் அபாயங்களை அந்தப் படத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் வேதனை நிலை இன்றைக்கும் தொடர்கிறது. பட்டினிச் சாவுகள் இந்த மண்ணில் இனியும் தொடரக் கூடாது. விவசாயிகளுக்கு நல்வாழ்வு பிறக்க வேண்டும். பணத்துக்காக நிலத்தை விற்கும் நிலை வரக்கூடாது. விவசாயிகளின் குரலாக கத்துக்குட்டி படம் ஒலித்தலாலே நான் அந்தப் படத்தில் ஆர்வத்தோடு நடித்தேன்.

இது திருமண விழா அல்ல... விவசாயத் திருவிழா போலிருக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கே குழுமி இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்து பேசிய இயக்குனர் சசிகுமார், “விவசாய மக்கள் திரண்டிருக்கும் இந்த அரங்கில் நானும் நிற்பது பெருமையாக இருக்கிறது. இது என் குடும்ப விழா. இயக்குனர் சரவணன் விவசாயிகளுக்கான படத்தைக் கொடுத்தவர். அதனால் விவசாய மண்ணிலேயே இந்த விழாவை நடத்துகிறார். ஒவ்வொரு கலைஞர்களும் மண்ணுக்கான மரியாதையை செய்பவர்களாக இருக்க வேண்டும்“ என்றார்.


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions