உதயநிதி ஸ்டாலினின் படப்பிடிப்பு களத்தில் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் சூரி!

Bookmark and Share

உதயநிதி ஸ்டாலினின் படப்பிடிப்பு களத்தில் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் சூரி!

ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களை மகிழ்விப்பதே ஒரு நடிகரின் சிறப்பு. அந்த வகையில் தனது பணியை சீரும், சிறப்புமாக செய்து வருகிறார் நடிகர் சூரி. மக்களை மகிழ்விக்கும் கலைஞனான சூரியின் பிறந்த நாள் விழாவானது , உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு களத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

“எங்களின் படப்பிடிப்பில் நடிகர் சூரியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியதில் எங்கள் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நாங்கள் அவரின் நகைச்சுவை நயத்துக்கு தருகின்ற மரியாதையாக கருதுகிறோம். சூரியின் டைமிங் மற்றும் கௌண்டர் காமெடிகளால் நான் அவருடைய மிக பெரிய ரசிகனாகிவிட்டேன்.

ஒவ்வொரு படத்திலும் தனித்துவம் காண்பித்து வரும் சூரிக்கு, இந்த படமும், இனி வரும் படங்களும் அவரின் வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமையும் என உறுதியாக நம்புகிறோம்…” என்று உற்சாகத்துடன் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

“ஒருவரின் பிறந்தநாளை தன்னுடைய பிறந்தநாள் போல் கொண்டாடுவதற்கு உண்மையாகவே மிக பெரிய உள்ளம் வேண்டும். என் மீது இவ்வளவு அன்பு வைத்து, எனக்காக இந்த பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த உதய் சாருக்கும், இயக்குனர் எழில் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த நாளை என்னுடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. ஒரு நடிகராக ரசிகர்களை மென்மேலும் மகிழ்வித்து, உற்சாகபடுத்த வேண்டும் என்பதை இந்த தருணத்தில் நான் அதிகமாக உணர்கிறேன்…”என்று உணர்ச்சிகரமாக கூறினார் நடிகர் சூரி.

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions