ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் சூரி!

Bookmark and Share

ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் சூரி!

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக நடித்தவர் சூரி. அந்த படத்தில் அவர் நடித்த புரோட்டா காமெடிதான் இப்போது வரை அவரை பேச வைத்துக்கொண்டிருக்கிறது. அதன்பிறகு எத்தனையோ படங்களில் அவர் காமெடி செய்து விட்டபோதும் அந்த காமெடிக்கு இணையான இன்னொரு காமெடி இதுவரை சூரிக்கு அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், அவர் என்ட்ரியான நேரத்தில் வடிவேலு, விவேக், சந்தானம் என பல காமெடியன்கள் கலக்கிக்கொண்டிருந்ததால் மூன்றாம்தட்டு காமெடியனாகவே இருந்த சூரி, தற்போது மேல்தட்டு காமெடியன்கள் அனைவருமே ஹீரோவாகி விட்டதால், முன்னணி காமெடியனாகி விட்டார்.

இந்த நிலையில், அவரையும் ஹீரோவாக்க சில இயக்குனர்கள் ஆசைவார்த்தை காட்டி வருகின்றனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயக்குநர்கள் விரிக்கும் ஹீரோ வலையில் சிக்காமல் இருந்து வரும் சூரி, இப்போதும் நழுவிக்கொண்டுதான் வருகிறார்.அதேசமயம், தனக்கு இருக்கிற மார்க்கெட்டை பயன்படுத்தி ஹீரோக்களுக்கு இணையான கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் சூரி.

அந்த வகையில், சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், ஜெயம்ரவியின் அப்பாடக்கர், விமலின் மாப்ள சிங்கம் ஆகிய படங்களில் ஹீரோயினிகளுடன் டூயட் பாடாதது தவிர மற்றபடி அவர்களுக்கு இணையான ரோலில் சூரியும் நடித்து தனது ரேஞ்சை உயர்த்திக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions