சுசீந்திரன் படத்துக்கு அன்லிமிடெட் கால்ஷீட்! - சூரியின் நன்றிக்கடன்!

Bookmark and Share

சுசீந்திரன் படத்துக்கு அன்லிமிடெட் கால்ஷீட்! - சூரியின் நன்றிக்கடன்!

பொதுவாக சினிமாவில் நன்றி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ள யாரும், குறிப்பாக நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.  

அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டாலும் பல நட்சத்திரங்கள் பல நேரங்களில் நன்றி உடன் நடந்து கொள்வதுமில்லை. முக்கியமாக தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்களை வளர்ந்த பிறகு நினைத்துப்பார்ப்பதில்லை.

அதேபோல் தனக்கு பிரேக் கொடுத்து தன்னை முன்னணி நட்சத்திரமாக்கியவர்களையும் கண்டு கொள்வதில்லை. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே நன்றி மறக்காதவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் சூரியும் ஒருவர் என்று சொல்லலாம்.அஜித் நடித்த ஜி உட்பட பல படங்களில் துணை நடிகராக தலைகாட்டி வந்த சூரிக்கு வெண்ணிலா கபடிகுழு படத்தில் படம் முழுக்க வருவதுபோல் முக்கியமான வேடத்தைக் கொடுத்தவர் இயக்குநர் சுசீந்திரன்.

அந்தப் படத்துக்குப் பிறகே சூரியை மக்கள் அடையாளம் கண்டனர். அதை இன்றும் மறக்காத சூரி, சுசீந்திரன் படத்தில் நடிக்கும்போது மட்டும் அன்லிமிடெட் கால்ஷீட்டுகளை அள்ளிக் கொடுக்கிறார்.

அதேபோல் அவரது படத்தில் நடிக்கும்போது சம்பளத்தையும் கறாராக இவ்வளவு வேண்டும் என்று கேட்பதில்லை. கொடுப்பதைக் கொடுங்கள் என்று வாங்கிக் கொள்கிறாராம். வெரிகுட்!


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
கதாநாயகனுக்கு டீச்சராக மாறிய நந்திதா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions