சூரியின் செல்போனை உடைத்த அஞ்சலி..!

Bookmark and Share

சூரியின் செல்போனை உடைத்த அஞ்சலி..!

அஞ்சலி பற்றி அரசல் புரசலாக சொல்லப்பட்ட விஷயம்தான். அதை மேடையிலேயே போட்டு உடைத்துவிட்டார் சகலகலாவல்லவன் படத்தின் இயக்குநரான சுராஜ்.பார்ப்பதற்கு சாதுபோல் இருக்கும் அஞ்சலி, நிஜத்தில் பயங்கர கோபக்காரி என்று படத்துறையில் உள்ளவர்கள் சொல்வார்கள்.

அவர் எந்தளவுக்கு கோபக்காரி என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொன்னார் சுராஜ்.

சகலகலாவல்லவன் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, மாலை பேக்கப் சொன்ன பிறகு அனைவரும் அவரவர் ரூமுக்குப்போய்விட்ட பிறகும் அஞ்சலி மட்டும் போக மாட்டாராம். கிரிக்கெட் விளையாடுவது உட்பட பல விளையாட்டுகள் விளையாடுவது அல்லது கேளிக்கை என டைம்பாஸ் செய்வாராம். அதனால் மறுநாள் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவாராம்.

இதனால் படப்பிடிப்பு தாமதமானதை அடுத்து அஞ்சலியை சீக்கிரம் போய் தூங்கச்சொல்லி இருக்கிறார் சூரி. அவரது அட்வைஸ் அஞ்சலியை டென்ஷனாக்கிவிட்டதாம்.

உடனே சூரியின் செல்போனைப் பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கிறார்.தன்னுடைய செல்போனை உடைத்த அஞ்சலியிடம் வேறு செல்போன் வாங்கிக்கேட்டு நச்சரித்து வருகிறார் சூரி. அஞ்சலி தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ்!


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions