உதயநிதி –அதர்வாவுடன் கைகோர்க்கும் சூரி

Bookmark and Share

உதயநிதி –அதர்வாவுடன் கைகோர்க்கும் சூரி

இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.

‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

விரைவில் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படம் ஒன்றை தயாரித்து நடிக்கிறார். இதுவரை சந்தானம், கருணாகரனுடன் சேர்ந்து ‘காமெடி’ செய்து வந்த உதயநிதி முதல்முறையாக இந்த படத்தில் சூரியுடன் சேர்ந்து நடிக்கிறார்.

இதுபோல் அதர்வாவுடனும் சூரி கைகோர்க்கிறார். படத்தின் பெயர் ‘ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்’ இது முழுநீள நகைச்சுவை படமாக உருவாகிறது.

ஈட்டி, கணிதன் படங்களை தொடர்ந்து ‘ருக்குமணி வண்டி வருது’, ‘செமபோதை ஆகாத’ ஆகிய படங்களில் ஆதர்வா நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து முதன்முறையாக நகைச்சுவை படமான ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி இருக்கிறது. இதில் அதர்வா நடித்து வருகிறார். கதைப்படி ஜெமினி கணேசனாக வரும் அதர்வாவுடன் சுருளிராஜனாக சூரி படம் முழுவதும் சேர்ந்து வந்து கலகலப்பூட்டுவது போல கதை அமைந்துள்ளது.

ஏற்கனவே சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், விமல் ஆகியோருடன் படம் முழுவதும் பயணித்து போல, இந்த 2 படங்களில் சூரி–உதயநிதி, அதர்வாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்க இருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions