ஜெயம்ரவியுடன் வரிந்து கட்டிய சூரி!

Bookmark and Share

ஜெயம்ரவியுடன் வரிந்து கட்டிய சூரி!

சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள படம் அப்பாடக்கர். இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி இன்னொரு நாயகியாக வருகிறார். இவர்தான் பங்காளிகளான ஜெயம்ரவி-சூரி ஆகிய இருவருக்கும் முறைப்பெண்ணாம்.

ஆனால் கதைப்படி இரண்டு பேரில் ஒருவருக்குகூட அவர் ஜோடி சேர மாட்டாராம். மேலும், இந்த படத்தில் ஜெயம்ரவி, சூரி இருவரது குடும்பத்திற்குமிடையே ஜென்ம பகையாம்.

அதனால், ஜெயம்ரவியை வீழ்த்த வேண்டும் என்று சூரியின் குடும்பத்தார் சின்ன வயதில் இருந்தே அவருக்கு ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து வளர்ப்பார்களாம்.

அதோடு, அவரை வீழ்த்த வேண்டும் என்ற வெறியை அவருக்கு தூண்டியே வளர்ப்பதால், அவர் இளவட்டங் காளையான பிறகு ஜெயம்ரவியை எப்போது பார்த்தாலும் சீறும் காளையாய் முறுக்கிக்கொண்டே திரிவாராம்.

அந்த வகையில், அக்னி நட்சத்திரம் பிரபு-கார்த்திக் போலவே எப்போது அவர்கள் சந்தித்துக்கொண்டாலும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வார்களாம். ஆக, அப்பாடக்கர் படத்தில் கிட்டத்தட்ட சூரிக்கும் ஜெயம்ரவிக்கு இணையான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதோடு, முறைப்பெண்ணான அஞ்சலியுடன் ஜெயம்ரவியை விட சூரிக்கு அதிகப்படியான காட்சிகளும் உள்ளதாம். அதனால் அப்பாடக்கர் சூரியை இன்னொரு ஹீரோ போன்று உயர்த்துக்காட்டும் படமாக வந்துள்ளதாம். 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions