என் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது - சூரி

Bookmark and Share

என் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது - சூரி

சினிமா அனுபவம் பற்றி சூரியிடம் கேட்ட போது மனம் திறந்து பேசினார்.

“நீ உழைத்து கொண்டே இரு. அதற்கான பலன் கிடைக்கும் என்பார்கள். அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். எந்த சப்போர்ட்டும் இல்லாமல், ஊரை விட்டு ஒடிவந்து, படுக்க இடமில்லாமல், உடுத்த துணி இல்லாமல், சாப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.

பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தேன். போராடி சினிமா வாய்ப்பு தேடினேன். நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு கட்டத்தில் சில வாய்ப்புகள் கிடைத்தது. நான் நடித்த படங்கள் ஹிட்டாக, பிரபலம் ஆனேன். முதல் சில ஆண்டுகள் எனக்கு சினிமா குறித்து பயம் இல்லை. பலர் ஆட்டோ கிராப் வாங்க ஆரம்பித்ததும் எனக்கு பயம் வந்தது. என் உழைப்புக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

நான் இயல்பிலேயே ஒல்லியானவன். சமீபத்தில் லேசாக தொப்பை வந்தது. அதை உடற்பயிற்சி செய்து குறைத்து விட்டேன். சில நடிகர்கள், இயக்குனர்கள் ஒல்லியாக இருக்க விரும்பறாங்க. அதுக்கு தக்கபடி நானும் உடற்பயிற்சி செய்து ஒல்லியாக இருக்கிறேன். நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். எனக்கு கஞ்சி கருவாடு தான் ரொம்ப பிடிக்கும்.

அந்த கஞ்சியை கூட இப்போது டயட் காரணமாக குறைவாகதான் குடிக்கிறேன். இப்படி ஒல்லியாக இருக்க, இன்னொரு காரணமும் இருக்கிறது. அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி செய்கிறேன். அதற்காக இப்படி இருக்கிறேன். அந்த முயற்சி வெளியே வரும் போது நீங்க பாராட்டுவீங்க.

சமீபத்தில் மதுரையில் அம்மா ஓட்டல் என்ற பெயரில் பரோட்டா கடை தொடங்கி உள்ளேன். நடிகர் சிவகார்த்திகேயன் என் மீதுள்ள நட்பு காரணமாக மதுரைக்கு வந்து ஓட்டலை திறந்து வைத்தார். அதை, என் சகோதரர் கவனிக்கிறான். ஓட்டல் பிசினஸ் செய்வதால் பலரும் செட்டில் என்னை கேலி செய்து கிட்டு இருக்காங்க” என்றார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions