சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்த பாண்டிராஜ்!

Bookmark and Share

சூரிக்கு முக்கியத்துவம் கொடுத்த பாண்டிராஜ்!

சந்தானத்தை சினிமாவில் வளர்த்து விட்டவர் சிம்பு. அதன்காரணமாக சிம்புவின் படங்களில் எப்போது நடிக்க அழைத்தாலும் முதல் ஆளாக சென்று நிற்பார் சந்தானம். அதோடு, என்னை வளர்த்து விட்டவர் சிம்பு.

அந்த வகையில் அவர்தான் எனது காட்பாதர் என்றும் சில மேடைகளில் சொல்லி வந்தார் சந்தானம். அப்படிப்பட்டவர், தான் பிசியான பிறகு ரொம்பவே மாறி விட்டார்.

அதாவது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தில் நடிப்பதற்கு சரியானபடி கால்சீட் கொடுக்கவில்லையாம். அதனால் அந்த படத்தில் நயன்தாராவை காதலிக்கும்போது வரும் காட்சிகளில் சூரியையும், கல்யாணம் செய்து கொண்டபிறகு வரும் காட்சிகளில் சந்தானமும் சிம்புவுடன் வருவது போல் காட்சி பண்ணியுள்ள பாண்டிராஜ், சந்தானம் மக்கர் செய்ததால் அவரது காட்சிகளை குறைத்து விட்டாராம்.

மாறாக, சூரிக்கு அதிகப்படியான காட்சிகளை கொடுத்துள்ளாராம். அதனால் இளவட்டங்கள் விரும்பும் காதல் பஞ்ச் டயலாக்குகளை சூரிதான் பேசியுள்ளாராம். அதனால் சிம்பு படங்களில் வழக்கமாக சந்தானத்துக்கு கிடைக்கிற கைதட்டல்கள் அனைத்தும் இந்த படத்தில் சூரிக்குத்தான் கிடைக்குமாம். இது தனக்கு சந்தானத்துடன் பலப்பரீட்சை நடத்த சரியான சந்தர்ப்பம் என்பதால், புகுந்து விளையாடியிருக்கிறாராம் சூரி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions