நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி

Bookmark and Share

நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி

ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் சங்கிலி புங்கிலி கதவ துற. இந்த படத்தின் படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அப்போது தனது பட அனுபவங்களை சூரி பகிர்ந்து கொண்டார்.அவர் கூறியதாவது, " படத்தில் வாழை இலையை கட்டி கொண்டு ஓட வேண்டும்.

அப்போது என்னை 2 நாய்கள் துரத்தும், ஆனால் படப்பிடிப்பின் போது 4 நாய்கள் துரத்தின. எப்படினு கேட்கறீங்களா தெரு நாய் ரெண்டும் சேர்ந்து துரத்தியது.அப்புறம் மாடியில் தொங்கும் காட்சியில் நடிக்கும் போது கீழே விழுந்து கட்டை காலில் குத்திக்கொண்டு ரத்தம் வழிந்தது. இருப்பினும் நடித்து கொடுத்தேன்.

பின்னர் நான் தங்கிருந்த அறை எனக்கு செட் ஆகாததால் ரூம் மாற்ற சொல்லி கூறியிருந்தேன், ஆனால் என்னிடம் சொல்லாமலே ரூம் மாற்றிவிட்டார்கள். நான் பழைய ஞாபகத்தில் நடுராத்திரியில் ரூம் உள்ளே சென்று விட்டேன்.

உள்ளே பார்த்தால் ஒரே பெண்களா இருந்தாங்க, அப்படியே நமக்கு எதுக்கு வம்புனு டேர்ன் எடுத்து வெளிய வந்துட்டேன். அப்புறம் அவங்கள எப்படியோ சமாளிச்சிட்டேன். " என்று கூறியிருந்தார்.இணையதளம் திரை விமர்சனம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions