சூரிக்கு செல்லும் சந்தானத்தின் படங்கள்!

Bookmark and Share

சூரிக்கு செல்லும் சந்தானத்தின் படங்கள்!

வடிவேலு-விவேக்கிற்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக தலைதூக்கினார் சந்தானம். முதலில் அவருக்கு போட்டியே இல்லாமல் இருந்தபோதும் திடீரென புரோட்டா சூரி வளர்ந்து வந்து நின்றார்.

இதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் அவர்களுக்கிடையே திரைமறைவில் போட்டி ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மேல்தட்டு ஹீரோக்களின் அதிக படங்களில் சந்தானம், விமல், சிவகார்த்திகேயன் போன்ற இரண்டாம் தட்டு ஹீரோக்களின் படங்களாக சூரியும் கைப்பற்றி நடித்து வந்தனர்.

ஆனால், இப்போது இனிமே இப்படித்தான் என்று ஹீரோவாக நடிப்பதிலேயே சந்தானத்தின் கவனம் திரும்பி விட்டதால் சூரிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதன்காரணமாக, வடிவேலுவுக்கு பிறகு சந்தானத்தையே தனது படங்களில் பயன்படுத்தி வந்த சுந்தர்.சியே தனது அரண்மனை-2 படத்துக்கு சூரியை புக் பண்ணி விட்டார்.

அதேபோல், சிங்கம்-2 படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்த ஹரியும், தனது சிங்கம்-3 படத்திற்கு சூரியை புக் பண்ணி விட்டார். இதைத் தொடர்ந்து சந்தானத்தின் பேவரிட் இயக்குனர்கள் சிலரும் தற்போது சூரியை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இதனால் போட்டியே இல்லாமல் வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறார் சூரி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions