ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா

Bookmark and Share

ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா

‘சுந்தரபாண்டியன்’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர்தான் சௌந்தரராஜா. இவர் தற்போது ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலின் நண்பனாகவும், ‘கள்ளன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், ‘ஒரு கனவு போல’ படத்தில் கதை நாயகர்களில் ஒருவராகவும் நடித்து வருகிறார் சௌந்தரராஜா. 

அடுத்தடுத்து படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருக்க, ஹீரோவாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிக உற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் ‘கள்ளன்’ படத்திலும் சௌந்தரராஜாவின் கதாபாத்திரம் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதுபற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, ‘ஒரு கனவு போல’ படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜா சார், பாக்கியராஜ் சார் படங்கள்போல கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. ‘ஒரு கனவு போல’ அப்படி ஒரு படமாக இருக்கும்.

கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ‘ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர் விஜயசங்கர் சார். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது. படம் பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.

இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குனர் சந்திரா அக்காவின் ‘கள்ளன்’ படம் நிருபிக்கும். ‘கள்ளன்’ படத்தில், நடித்தது நிஜமாகவே பெருமையான விசயம். ‘ஒரு கனவு போல’, ‘கள்ளன்’ இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும். 

ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்க அழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன் என்றார்.


Post your comment





Related News
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
விஷால், சித்தார்த்திடம் பாராட்டுப் பெற்ற சௌந்தரராஜா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions