மலையாளப் படத்தில் ஹீரோவாகும் சவுந்தரராஜா

Bookmark and Share

மலையாளப் படத்தில் ஹீரோவாகும் சவுந்தரராஜா

இயக்குனர், நடிகர் சசிகுமாரின் டீமைச் சேர்ந்தவர் சவுந்தரராஜா. சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகிர்தண்டா படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார் அடுத்து ராமகிருஷ்ணன் இயக்கி, நடிக்கும் படத்தில் இணை ஹீரோவாக நடிக்கிறார்.

இதற்கிடையில் மலையாளப் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். "கேரளாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தயாரித்து இயக்கும் படத்தில், என்னை ஹீரோவாக நடிக்க கேட்டார் ஒப்புக் கொண்டேன்.

தமிழில் முழுமையான ஹீரோவாக ஆவதற்குள் மலையாளத்தில் ஹீரோவா என்று நினைக்கலாம். இன்று தமிழில் வெற்றி பெற்ற ஹீரோக்களாக வலம் வரும் கமல் சார், விக்ரம் சார் போன்றவர்கள் முதலில் மலையாளத்தில்தான் ஹீரோவாக நடித்திருக்கிறார்கள்" என்கிறார் சவுந்தரராஜா.


Post your comment





Related News
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
இந்தப் படத்தில்தான் பேசிய சம்பளத்தைப் பெற்றிருக்கிறேன்! - ஒரு ஹீரோவின் வாக்குமூலம்
கமல் ரஜினி சார் பாராட்டுக்காக ஏங்குகிறேன் நடிகர் சவுந்தரராஜா!
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions