செளந்தர்யா அஸ்வின் ஓகே பண்ணி வைத்திருந்த 7 படக்கதைகள்!

Bookmark and Share

செளந்தர்யா அஸ்வின் ஓகே பண்ணி வைத்திருந்த 7 படக்கதைகள்!

கோச்சடையான் படத்தை இயக்கிய ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, அதன்பிறகும் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் பொறுப்பு வகித்தார்.

அப்போது அந்நிறுவனம் தயாரிக்கயிருந்த புதிய படங்களுக்காக கதைகளும் கேட்டு வந்தார். அந்த வகையில் 10 படங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஈராஸ் நிறுவனம் முடிவு செய்தபோது செளந்தர்யாதான் இளவட்ட டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்து கதை கேட்டு வந்திருக்கிறார்.

அந்த படங்கள் ஒவ்வொன்றும் இரண்டரை கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்ததாம். அந்தவகையில், சுமார் 50 டைரக்டர்களிடம் கதை கேட்டு அதில் 7 கதைகளை இயக்குவதற்கு முடிவு ஓகே பண்ணி வைத்திருந்தாராம் செளந்தர்யா.

அதனால் அந்த படங்களை இயக்கயிருந்த புதுமுக டைரக்டர்கள் மிகப்பெரிய நிறுவனத்துக்கு படம் இயக்கப்போகிறோம் என்று உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக திடீரென்று செளந்தர்யா அஸ்வின் ஈராஸில் இருந்து வெளியேறினார்.

விளைவு, அந்த 7 கதைகளையும் படமாக்குவதை அப்படியே நிறுத்தி விட்டதாம் ஈராஸ் நிறுவனம். அதனால் அவர்களை நம்பி காத்துக்கொண்டிருந்த இயக்குனர்கள் இப்போது அந்த கதைகளை வேறு கம்பெனிகள் சொல்லி வாய்ப்பு தேடி வருகின்றனர்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions