விலங்குகள் நலவாரிய தூதராக நியமனம்: சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Bookmark and Share

விலங்குகள் நலவாரிய தூதராக நியமனம்: சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக செயல்பட்ட விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக சவுந்தர்யா நியமிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த அமைப்பில் இருந்து அவர் பதவி விலக வலியுறுத்தியும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், சவுந்தர்யாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், அவரது உருவப்படத்தை தீயிட்டும் எரித்தனர்.

இதுகுறித்து தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் முரட்டுகாளை திரைப்படத்தில் காளையை அடக்குவது போன்ற காட்சியில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

ஆனால் அவரது இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அவர் விளம்பர தூதர் பதவி மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்தை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார். 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions