ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது

Bookmark and Share

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார்.

சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் - சவுந்தர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதிகாரபூர்வமாக விவகாரத்தும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து சவுந்தர்யா, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார். இவர் அமெரிக்காவில் படித்தவர். ‘வஞ்சகர் உலகம்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர்.

தற்போது சவுந்தர்யா விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. “சவுந்தர்யா, விசாகன் திருமணம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி பிப்ரவரி 9-ந் தேதி முதல் மெகந்தி, வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
மறதி நோயால் அவதிப்படும் அரவிந்த்சாமி
ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions