கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் ஆட்டம் போட்ட ஸ்ரீகாந்த்!

Bookmark and Share

கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் ஆட்டம் போட்ட ஸ்ரீகாந்த்!

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த்தும், ராகவா லாரன்ஸ் போன்று செளகார்பேட்டை, சாமியாட்டம் என்று பேய் படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

இந்த இரண்டு படங்களிலுமே நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு கண்களை உருட்டி பேயாட்டம், சாமியாட்டம் என்று அதிரடி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். இதில் வடிவுடையான் இயக்கத்தில் நடித்து வரும் செளகார்பேட்டை படத்தில் ஒரு பாடல் காட்சியில் நள்ளிரவில் சுடு காட்டுக்கு சென்று அங்குள்ள பேய்களுடன் கலந்து ஆடியிருக்கிறாராம் அவர்.

இதற்காக சென்னையிலுள்ள கண்ணம்மா பேட்டை போன்று சில ஏரியா சுடுகாடுகளை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அந்த பாடல் காட்சியில் ஸ்ரீகாந்து ஆடும்போது, அவருடன் சுடுகாட்டில் உள்ள மொத்த ஆண்-பெண் பேய்களும் எழுந்து வந்து ஆடுவது போன்று மிரட்டலாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

இதற்காக ஸ்ரீகாந்துடன் 100 பெண் பேய்களும், 150 ஆண் பேய்களும் ஆடியிருக்கிறார்களாம். இந்த பாடல் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை குலைநடுங்க வைத்து விடும் அளவுக்கு படுபயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
நான் போராடிய காலத்தில் எனக்கு உதவியவர் விஜய் – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்!
கீழே விழும் வரை நடனம் ஆடுவேன்: ராய் லட்சுமி
சிறிய பட்ஜெட் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா!
சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை: ஸ்ரீகாந்த் விளக்கம்
பேசவில்லை பழகவில்லை ஒரு பேட்டி மூலம் கவர்ந்து விட்டார் ஸ்ரீகாந்த்! -சூர்யா பேச்சு.
ஸ்ரீகாந்த் எதிர்பார்க்கும் பாகன் !
எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையானவர் விஜய் : ஸ்ரீகாந்த் புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions