லட்சுமிராய், ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார்பேட்டை

Bookmark and Share

லட்சுமிராய், ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார்பேட்டை

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ அடுத்து தயாரிக்கும் படம் சவுகார்பேட்டை. தம்பி வெட்டோத்தி சுந்தரம், கன்னியும் காளையும் செம காதல் போன்ற படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

லட்சுமிராய், ஸ்ரீகாந்த், சரவணன், சுமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். எஸ்.சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இன்று (மார்ச் 25) காலை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

சவுகார்பேட்டை பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:

பேண்டசியான பேய் படங்களுக்கு இப்போது தனி மவுசு இருக்கிறது. அரண்மணை, யாமிருக்க பயமே, காஞ்சனா போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் வருகிறது சவுகார்பேட்டை, பேண்டசியான பேய் படம் என்பதை தவிர அந்த படங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

சென்னையில் அதிக பணமும், மக்களும் புழங்கும் பகுதி சவுகார்பேட்டை பகுதி. மற்றவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம். அந்த பகுதியில் தெருவுக்கு ஒரு பேய் கதை இருக்கிறது. அப்படி பிடித்த ஒரு பேய் கதைதான் இது.

பணத்தோடு பேயும் புரண்டால் எப்படி இருக்கும் என்பதுதான் திரைக்கதை. லட்சுமிராய் பேயா, ஸ்ரீகாந்த் பேயா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இரண்டுபேரும் நல்ல காதலர்கள் என்பதை மட்டும் இப்போது சொல்லலாம். முழு படமும் சவுகார்பேட்டை பகுதியில் படமாக்கப்பட உள்ளது என்றார் வடிவுடையான்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions