உயிர் தப்பிய நடிகர் சவுந்தரராஜா மற்றும் அவரது குடும்பத்தினர்!

Bookmark and Share

உயிர் தப்பிய நடிகர் சவுந்தரராஜா மற்றும் அவரது குடும்பத்தினர்!

‘சுந்தரபாண்டியன்’உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் சவுந்தரராஜா. இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த “தர்மதுரை” படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவுந்தரராஜா தனது அம்மா, அண்ணன் உள்பட தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்று தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும் வழியில் கோவில்பட்டி அருகே அவர்கள் பயணித்த கார் என்ஜினில் இருந்து திடீரென்று புகை வந்துள்ளது.

உடனே, காரை நிறுத்திவிட்டு என்னவென்று பார்ப்பதற்குள் கார் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அப்போது, காரின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு இறங்கினார்கள். இதனால், சவுந்தரராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions