மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Bookmark and Share

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

'ஜெனரேஷன் சேன்ஞ்' எனப்படும் தலைமுறை மாற்றம் என்பது எல்லா தொழிலிலும் தவிர்க்க முடியாத ஒன்று. காலம் மாற மாற அது பல இடத்தில் அதன் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

திரையுலகில் அது இன்னமும் அதிகமாக இருக்கும். எப்போதோ ஒரு சமயத்தில் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதை யாராலும் தடுக்க முடியாது தவிர்க்கவும் முடியாது. 40 ஆண்டு காலமாக தென்னிந்திய மொழிகளில் பின்னணிப் பாடகராக இருந்து கொண்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஆமோதிக்கிறார்.

'மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை' என்கிறார்.“முன்பைப் போல நான் நிறைய பாடல்கள் பாடுவதில்லை. எனக்கு யார் வாய்ப்பு தருகிறார்களோ, அவர்களுக்காகப் பாடுகிறேன்.

மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளில் பாடும் போது ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகம் திருப்தியைக் கொடுக்கிறது. இன்னும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் காட்டும் அன்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிமுகமான போது சிறிய ஹீரோக்களுக்கு மட்டும்தான் பாடிக் கொண்டிருந்தேன். அதன் பின்தான் பெரிய ஹீரோக்களுக்குப் பாட ஆரம்பித்தேன்.

மாற்றங்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இப்போது பாடும் இளைஞர்களெல்லாம் இனிமையாகவே பாடுகிறார்கள். எங்களை விட அவர்கள் திறமைகளில் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் திறமையானவர்கள் நன்றாகவும் பாடுகிறார்கள். இப்போது என்னை யாராவது பாட வேண்டும் என்று அணுகினால், அவர்கள் என்னை எதற்கு பாட அழைக்கிறார்கள் என்ற காரணத்தைத் தெரிந்து கொண்டுதான் பாடுகிறேன்.

எல்லா பாடல்களையும் நம்மால் பாட முடியாது, ஆனால் கடந்த காலங்களில் நான் பாடிய பாடல்கள் இன்னும் பத்து தலைமுறைகள் ரசித்துக் கேட்கும்படி இருக்கும். அதுவே எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சி தரக் கூடியதாகவும் இருக்கும், அதை எதுவும் தட்டிப் பறித்துவிட முடியாது. என்னால் முடிந்த வரைக்கும் பாடுவேன், அதற்கு ஆண்டவன் என் மீது கனிவாக இருப்பார் என நம்புகிறேன், ” என எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions