கேரள அரசு சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரிவராசனம் விருது

Bookmark and Share

கேரள அரசு சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரிவராசனம் விருது

கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில், அரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் விருது குறித்து கேரள தேவசம் போர்டு துறை மந்திரி வி.எஸ். சிவகுமார் கூறியிருப்பதாவது:-

நீண்ட காலம் இசை உலகில் சிறந்த சேவையாற்றி வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அதிக அளவில் அய்யப்பன் பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். அய்யனின் புகழ் பாடி உலகெங்கும் பரவச் செய்த அவருக்கு இந்த ஆண்டின் அரிவராசனம் விருது வழங்க தீர்மானித்துள்ளது.

சபரிமலை சிறப்பு அதிகாரி கே. ஜெயக்குமார் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரை ஆய்வு செய்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தேர்ந்தெடுத்தது.

இது தொடர்பாக வருகிற ஜூன் மாதம் சபரிமலை சாஸ்தா கலையரங்கில் நடைபெறும் விழாவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அரிவராசனம் விருதும் ரூ.1 லட்சம் மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு மந்திரி கூறினார்.

பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் உள்பட பலருக்கு இந்த விருது கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions