பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது

Bookmark and Share

பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது

இந்தியாவின் பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி கின்னஸ் சாதனையாளராக திகழும் பிரபல பிண்ணினிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது இன்று வழங்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும் விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை மற்றும் சர்வதேச சகோதரத்துவத்தை வலியுறுத்தி சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்ப்பட்டுள்ளது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னிதான வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இந்த விருதை கேரள மாநில அறநிலையத்துறை மந்திரி சிவக்குமார் வழங்கி, வாழ்த்தினார்.

இந்த விருதுக்கு நன்றி தெரிவித்து பேசிய எஸ்.பி. பாலசுப்ரமணியம், ’ஒரு பாடகராக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விருதுகளை பெற்றுள்ளேன். அவை அனைத்திலும் இந்த ஹரிவராசனம் விருதை மிகவும் சிறந்த விருதாக கருதுகிறேன். மத நல்லிணத்துக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக சுவாமி ஐயப்பன் ஆலயம் விளங்குகின்றது.

ஐயப்பனின் புகழை இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நான் பக்திப் பாடல்களாக பாடியுள்ளேன். எனினும், ஐயப்பனின் இந்த சன்னிதானத்துக்குள் நுழைவது இதுவே முதல்முறை’ என்று கூறினார்.


Post your comment





Related News
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions