கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

Bookmark and Share

கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை என்று உத்தமவில்லன் படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.

கமலஹாசனின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

உத்தமவில்லன் படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. உத்தமவில்லன் தமிழ் படத்தின் இசை, சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் நடைபெற்றது. 

விழாவில் கமலஹாசன், படத்தின் கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஸ்ரீராம், தெலுங்கு பட விநியோகஸ்தர் கல்யாண், கமல் மகள் சுருதி ஹாசன், கவுதமி மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்,  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது, கமலஹாசனின் 120 படங்களுக்கு தெலுங்கில் நான் டப்பிங் செய்து உள்ளேன்.

கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை. அவரிடமும், இயக்குனர் பாலச்சந்தரிடமும் கற்று தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. கமலும், நானும் வேறு அல்ல.

என்னை அண்ணா என்று அழைக்கும் மனம் ஒன்றிய நண்பர்களில் அவரும் ஒருவர். நானும் அவரை தம்பி என்றே அழைக்கிறேன்.  இப்போது உத்தமவில்லன் படத்தில் நடித்ததன் மூலம் பாலசந்தருடன் ஒரு சில நாட்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

இது என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று. கமலஹாசன் சாகர சங்கமம், சுவாதி முத்யம் படத்துக்கு பிறகு தெலுங்கில் நடிக்கவில்லை. இந்த உத்தமவில்லன் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.  இவ்வாறு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசினார்.

 


Post your comment

Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions