குரலை வித்தியாசப்படுத்தி பாடிய எஸ்.பி.பி.சரண்!

Bookmark and Share

குரலை வித்தியாசப்படுத்தி பாடிய எஸ்.பி.பி.சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானபோதும், உன்னைச்சரணடைந்தே என்ற படத்தை தயாரித்த எஸ்.பி.பி.சரண் அந்த படத்தில் தானும் ஒரு வேடத்தில் நடித்தார்.

அதையடுத்து, சரோஜா, துரோகி, வானவராயன் வல்லவராயன் என பல படங்களில் நடித்தார். அதேசமயம், நடிப்பு, தயாரிப்பு என்று பல பாதைகளில் பயணித்தபோதும் சினிமாவிலும் தொடர்ந்து பாடி வந்த சரண், தற்போது இந்தியா பாகிஸ்தான் என்ற படத்திற்காக பாடலாசிரியர் அண்ணாமலை எழுதியுள்ள, ஒரு பொண்ணை பார்த்தேன் மாமா, அவ கொன்னுபுட்டா ஆமா -என்ற ஒரு கலக்கலான பாடலை பாடியிருக்கிறார்.

இந்த ஜாலியான பாடலை தனது வழக்கமான குரலில் பாடாமல் தனது குரலை வித்தியாசப்படுத்தி பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.சரண். இந்த பாடல் இணைய தளத்தில் வெளியானதை அடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.

அதனால், அப்பாடலை எழுதிய அண்ணாமலை, பாடிய எஸ்.பி.பி.சரண், இசையமைத்த தீனா தேவராஜன் ஆகியோர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions