விவசாயிகளின் பிரச்சினை பற்றி படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்

Bookmark and Share

விவசாயிகளின் பிரச்சினை பற்றி படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்ட கமர்ஷியல் படங்களை இயக்குகிறவர். இயற்கை படத்தில் கடல்சார் மக்களின் பிரச்சினைகளை பேசினார்.

ஈ படத்தில் நோய்களை பரப்பி நடத்தப்படும் போர் பற்றி பேசினார். பேராண்மை படத்தில் காடுவளம் கொள்ளையடிக்கப்படுவதை சொன்னார். தற்போது அவர் இயக்கி வரும் புறம்போக்கு படத்தில் தூக்கு தண்டனை பற்றி பேசுகிறார்.

அடுத்து ஜனநாதன் விவசாய பிரச்சினைகளை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். புறம்போக்கு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இதற்கான வேலைகளை துவங்கி விட்டார்.

ஆண்டுதோறும் குறைந்து வரும் விவசாய நிலங்கள், குடியிருப்பு, பிளாட்டுகளாக மாறும் நீர் நிலைகள், தொழிற்சாலைகளுக்கும், குளிர்பானங்களுக்கும் உறிஞ்சப்படும் நிலத்தடி நீர், ஆற்றை மலடாக்கும் மணல் மாபியா, அண்டை மாநில நீர் பகிர்வு பிரச்சினை, விவசாயத்தை வைத்து நடக்கும் அரசியல் என பல்வேறு களங்களில் திரைக்கதை அமைக்கும் பணியை துவக்கி விட்டார்.

உதவியாளர்கள் மூலம் இதற்கான தகவல்களை சேகரித்து வருகிறார். புறம்போக்கு ஏப்ரலில் வெளிவருகிறது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து விவசாய படத்தை தொடங்குவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions