எஸ்.பி.ஜனநாதனுக்கு அதிர்ச்சி கொடுத்த கேமராமேன்!

Bookmark and Share

எஸ்.பி.ஜனநாதனுக்கு அதிர்ச்சி கொடுத்த கேமராமேன்!

இயற்கை படத்தை அடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் ஈ. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில், ஜீவா-நயன்தாரா, பசுபதி, கருணாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். அப்படத்துக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்க, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, ஒருநாள் இரவு படப்பிடிப்பு முடிந்து தூங்கச்சென்றுவிட்டாராம் ஜனநாதன்.

அதையடுத்து திடீரென்று யாரோ அழைப்பதுபோல் இருக்க அவர் கண்விழித்துப்பார்த்தபோது, இன்று படமாக்கிய காட்சிகள் எதுவுமே சரியாக எக்ஸ்போஸ் ஆகவில்லை என்று கேமராமேன் யூனிட்டில் உள்ளவர்கள் சொன்னார்களாம்.

ஆனால் அந்த படத்துக்கு ஜீவாவின் தந்தையே தயாரிப்பாளர் என்பதால் அதுகுறித்து அவரிடம் பேசி அடுத்தநாள் மீண்டும் அதே காட்சிகளை படமாக்கினார்களாம்.

இதேபோன்று சமீபத்தில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான புறம்போக்கு படப்பிடிப்பு நடந்தபோதும் ஏற்பட்டதாம். அதாவது ஒரு இரண்டு நாட்கள் படமாக்கியதை பின்னர் போட்டுப்பார்த்தபோது கோடு கோடாக வந்ததாம். அதனால் அந்த காட்சிகளை திரும்ப ரீ-ஷூட் பண்ணினார்களாம்.

ஆனால், இந்த புறம்போக்கு படத்தை அவரே பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்ததால் அந்த இரண்டு நாள் படப்பிடிப்புக்கான தொகையை அவர் கையில் இருந்துதான் போட வேண்டிய நிலை ஏற்பட்டதாம். ஆனபோதும், அவர் இன்ஸ்சூரன்ஸ் போட்டு வைத்திருக்கிறாராம். அந்த பணம் இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லையாம்.

மேலும், ஈ, புறம்போக்கு என்ற இரண்டு படங்களுக்குமே என்.கே.ஏகாம்பரம்தான் கேமராமேன். எஸ்.பி.ஜனநாதனின் ஆஸ்தான கேமராமேன் இவர்தான். இவர்கள் கிடைக்கவில்லை என்றால்தான் வேறு கேமராமேன்களை தனது படங்களுக்கு பயன்படுத்துவார் ஜனநாதன்.


Post your comment





Related News
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions