எஸ்.பி .முத்துராமனின் மேடை நாகரிகம்!

Bookmark and Share

எஸ்.பி .முத்துராமனின் மேடை நாகரிகம்!

சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் போன்றோரை மட்டுமல்ல இன்றைய விக்ரம் வரை எல்லா கதாநாயகர்களையும் வைத்து சுமார் 70 படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினியை வைத்து அதிகப்படங்கள் அதாவது 25 படங்கள் இயக்கிய பெருமைக்குரியவர் அவர்.

இப்போது படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்தாலும் அழைப்பிதழ் கொடுத்து தன்னை மதித்து அழைக்கும் சினிமா விழாக்களுக்குத் தவறாமல் சென்று வாழ்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி வாழ்த்தும் போது சம்பந்தப்பட்ட அழைப்பிதழ் ஒன்றை எடுத்துக் கொண்டு அதிலுள்ள பெயர்களை எல்லாம் கவனத்தில் கொண்டு படக்குழுவினரின் பெயர்களில் இயக்குநர் முதல் ஸ்டில்போட்டோகிராபர் வரை தெரிந்து கொண்டு விவரம் சேகரித்துக் கொண்டு ஒவ்வொருவர் பற்றியும் கூறி தனித்தனியாக வாழ்த்துவதை வழக்கமாகிக் கொண்டு இருக்கிறார்.

இப்படி படக்குழுவினரை நெகிழ வைப்பதுடன் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் பற்றியும் கூடுதலான சுவையான தகவல்களைக் கூறி மகிழவைப்பார். பல விழாக்களில் மேடையேறும் பிரபலங்கள் எனக்கு இந்தப் படம் பற்றி எதுவும் தெரியாது. கூப்பிட்டார்கள். வந்தேன் என்று அசடு வழிவார்கள்.

அப்படி ஒரு சினிமா விழாமேடையில் தயாரிப்பாளர் புதியவர் ஒருவர், இணைத்தயாரிப்பாளர் வேறு ஒருவர். அவர் ஒரு  பெண்மணி. இருவரும் மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ புத்திசாலித்தனமாக பேசுவதாகக் எண்ணி அவர்களை கணவன் மனைவி போல பேசி வாழ்த்தினார் பிரபலம் ஒருவர்.

அவர்களைப் பற்றித் தெரியாத கூட்டமும் கைதட்டியது. அவர்களோ தர்ம சங்கடத்தில் நெளிந்தார்கள். இப்படிப் பேசுகிறவர்கள் எஸ்.பி.எம்-மைப் போல தெரிந்து கொண்டு பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions