சுதந்திர போராட்ட வீரர்களை நிஜமாக காட்டியது சினிமாதான்: எஸ்.பி.முத்துராமன் பேச்சு

Bookmark and Share

சுதந்திர போராட்ட வீரர்களை நிஜமாக காட்டியது சினிமாதான்: எஸ்.பி.முத்துராமன் பேச்சு

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் நேற்று பாரதி விழா நடைபெற்றது. பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்ஆசிரியர் வை.சிவசங்கரன் வரவேற்று பேசினார்.

பழம்பெரும் சினிமா டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், நம் உரத்த சிந்தனை திருநெல்வேலி சிறப்பிதழை வெளியிட்டார். தலைமை ஆசிரியர் உ.சுப்பையா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில் கூறியதாவது:-

நெல்லை மண்ணில் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இந்த மண்ணை தொட்ட போது அந்த உணர்ச்சி தெரிகிறது. சினிமா கெடுதல் அல்ல, பவர்புல் மீடியா. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை நிஜமாக காட்டியது சினிமாதான். அவர்களை சினிமாதான் நினைவு படுத்தியது.

ரஜினிகாந்த், மனோரமா போன்றவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாரதியாரின் படைப்புகளை ஏ.வி.எம். பட அதிபர்தான் சேகரித்து, அதை அரசுக்கு வழங்கினார். ‘பிரியா’ பட சூட்டிங்கிற்கு ஹாங்காங் சென்றிருந்த போது ஆங்கிலம் தெரியாததால் சற்று சிரமம் ஏற்பட்டது.

எனவே பள்ளிக்கூட பருவத்தில் நல்லமுறையில் மாணவர்கள் படிக்க வேண்டும். ஆங்கிலத்தை நன்றாக படித்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் தமிழையும் நன்றாக படியுங்கள். ஏனென்றால் தாய் மொழியான தமிழ் மூலம்தான் மற்ற மொழியை நாம் படிக்க முடியும். அம்பேத்கர், அண்ணா ஆகியோர் புத்தகம் அதிகம் படிப்பவர்கள்.

அண்ணா ஒரு புத்தகத்தை படித்து முடிப்பதற்காக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டார். அதே போல் அனைவரும் புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும்.

இவ்வாறு சினிமா டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசினார்.

இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பேச்சரங்கம், பாரதியாரின் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் முருக முத்துராமன், ஆசிரியர்கள் கந்தமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions