பேரரசுக்கு எஸ்.பி.முத்துராமன் சொன்ன அறிவுரை!

Bookmark and Share

பேரரசுக்கு எஸ்.பி.முத்துராமன் சொன்ன அறிவுரை!

பேரரசு ஒரு தன்னம்பிக்கை இயக்குநர், மற்றவர்களைவிட தன் திறமையை  நம்புகிறவர்.  அவர் ஆச்சரியப்படும் மனிதராக இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இருக்கிறார். கிடைக்கிற மேடைகளில் பார்க்கிற நண்பர்களிடம் எல்லாம் அவரைப் பற்றிப் பேசி வருகிறார். அப்படி எந்த விதத்தில் எஸ்.பி.முத்துராமன் கவர்ந்தாராம்? இதோ பேரரசு கூறுகிறார்.

"நான் ஒரு கமர்ஷியல் இயக்குநர், எனக்கு மானசீகமான குரு என்று எஸ்.பி.முத்துராமன் அவர்களைக் கூறுவேன். அவரது படங்கள் போல குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும்படியான படங்கள் எடுக்கவே நானும் விரும்புவேன்.  இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கும் அவரது அடக்கம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. தமிழ் சினிமாவிலேயே நான் முதலில் சந்தித்த இயக்குநர் அவர்தான்.

எங்கள் ஊரான நாட்டரசன் கோட்டை அருகே பாகனேரியில் அப்போது  முரட்டுக்காளை  படப்பிடிப்பு நடந்தது.  நான் 15 கி.மீ தூரம் சைக்கிளிலேயே சென்று படப்பிடிப்பு பார்த்தேன்.  நான் போன போது ரஜினி இல்லை, ரஜினி எப்போது வருவார் என்று இயக்குநரிடம் கேட்டேன். அவர் என்னைப் பார்த்து சிரித்தார் அன்பாகப் பேசினார் அவசியம் பார்க்க வேண்டுமா இன்னும் அரை மணி நேரத்தில் வருவார் என்றார். அப்போது பார்த்த அவரை இவ்வளவு ஆண்டு கழித்து இப்போது பார்த்தாலும் அதே அன்பு அதே அடக்கம். 

நான் இயக்கிய திருப்பதி  படம் வெளியாகி இருந்தது.  நான் ஏ.வி.எம்.மில் என் அலுவலகத்தில் இருந்தேன் என்னை பார்க்க முத்துராமன் சார் வந்திருப்பதாக உதவியாளர் சொன்னார். எந்த முத்துராமன் என்றேன். எஸ்.பி. முத்துராமன் சார் தான் என்றார். என்னால் நம்பக் கூட முடியவில்லை. அவரா இங்கு வரப் போகிறார் என்று நினைத்தேன். சொன்னதும் நானே வெளியே ஓடிப்போய் வரவேற்றேன். சொல்லியிருந்தால் நான் உங்களை வந்து பார்த்திருப்பேனே என்றேன்.

திருப்பதி  பார்த்தேன் நன்றாக இருந்தது. பாராட்டத் தோன்றியது வந்தேன். பாராட்ட வேண்டுமென்றால் தேடிச் சென்று பாராட்டுவது தான் முறை, பண்பாடு என்றார். எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம், அதன்பிறகு அவரை நான் பல முறை சந்தித்து இருக்கிறேன் எங்கள் வீட்டுக்கு விழாக்களுக்கும் வந்து பெருமைப்படுத்தி இருக்கிறார். 
ஒருவருக்கு தலைக்கனம்,  கர்வம் வரும் போது அவரை நினைத்தால் போதும் பாம்பு  கடித்து விஷம் ஏறியவருக்கு வேப்பிலை அடிக்கும்போது விஷம் இறங்குவது போல எல்லாம் இறங்கிவிடும்.

இவ்வளவு வெற்றிகளுக்குப் பிறகும் இவ்வளவு தன்னடக்கமாக எப்படி இருக்க முடிகிறது என்று வியப்பேன்.  என்னிடம் எதாவது கர்வம் தலை காட்டுகிற போது அவரை நினைப்பேன். தடாலடியாக கீழே விழுந்த உணர்வு வரும் கர்வம் எல்லாம் போய்விடும். சினிமாவில் வெற்றி தோல்லி சகஜம். இது எல்லாருக்கும் வரும், ஆனால் இரண்டையும் ஒரே விதமாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். அதை முடிந்தவரை கடைபிடிப்பேன் " என்றார்.  

சரி பாராட்டட வேண்டியவர்களை நடிகர் தன்னிடம் நேரில் அழைத்துப் பாராட்டுகிறாரே விஜய்,? அதுதான் மரியாதையா?  இதைப்பேரரசு  தன் நண்பர் விஜய்யிடம் சொல்வாரா?


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காமெடி நடிகை மதுமிதாவிற்கு திருமணம்
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions