'கண்டக்டருக்கு முன் ரஜினிகாந்த் மூட்டை தூக்கினார்'-எஸ்.பி.முத்துராமன்

Bookmark and Share

'கண்டக்டருக்கு முன் ரஜினிகாந்த் மூட்டை தூக்கினார்'-எஸ்.பி.முத்துராமன்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கவிஞர் பரமசிவன் எழுதிய 'ஒரு தமிழ்க் கவிஞனின் ஆங்கில பாடல்கள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், "சினிமாவில் நடிப்பதற்கு முன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அதனால்தான், அவர் தமிழக முதல்வரான பின் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

இதேபோல், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டவர்கள். அவர்களது கடின உழைப்பு, திறமை, புத்திசாலித்தனத்தால் சினிமாவில் சாதனை படைத்தனர்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலை செய்து கொண்டிருந்தார் என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். உண்மையில் ரஜினி கண்டக்டர் வேலைக்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இதை அவரே என்னிடம் சொன்னார்.

ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தபோது, அவர் நடிக்க வேண்டிய காட்சியை முடித்து விட்டு, அரிசி ஆலையில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மீது படுத்து தூங்கிவிட்டார்.

இதற்கிடையே வேறொரு காட்சி எடுத்து முடித்து விட்டு ரஜினி நடிக்க வேண்டிய காட்சிக்காக தேடியபோது, அவர் நெல் மூட்டை மீது தூங்குவதை அறிந்து எழுப்பினேன். நெல் மூட்டை மீது படுத்தால் உடம்பு அரிக்காதா? என கேட்டேன். அதற்கு அவர், நான் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்தேன், அதனால் எனக்கு உடம்பு அரிப்பெல்லாம் பழக்கமாகி விட்டது என்று சொன்னார்" இவ்வாறு முத்துராமன் கூறினார்.


Post your comment





Related News
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே
விஷாலுக்கு தீவிர சிகிச்சையா? - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி
தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.!
நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions