தெருவில் தனியாக நடக்கக்கூட முடியவில்லை! பாடகர் எஸ்.பி.பி உருக்கம்

Bookmark and Share

தெருவில் தனியாக நடக்கக்கூட முடியவில்லை! பாடகர் எஸ்.பி.பி உருக்கம்

உலக புகழ் பெற்ற பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை கொடுத்துள்ளார். தன் 72 வது பிறந்தநாளை கொண்டாடியவர் மிகவும் மன உருக்கத்துடன் பேசியுள்ளார்.

தன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர், கோணேட்டம் பேட்டை கிராமத்தில் தான் பிறந்த வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு, பின் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.என் தாய்மொழி இசை தான்.

இந்த கிராமத்திற்காக நான் எதுவும் செய்யவில்லை. இங்குள்ள மக்கள் என் மீது வைத்துள்ள அன்பை என்னால் மறக்க முடியாது.சினிமாவிற்கு வந்த பிறகு என சுதந்திரம் போய்விட்டது. பிரபலமாக இருப்பதால் தெருவில் கூட நடந்த செல்ல முடியவில்லை.

எல்லோரும் வந்து என்னை சுற்றிக்கொள்கிறார்கள்.இதனால் பொது நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து விடுகிறேன். என் கிராமத்து மக்கள் என்னை கோணேட்டம் பேட்டை மணியாக பார்த்தால் எனக்கும் மிகவும் சந்தோசம். இங்குள்ள கோவில் குளம் தூர்வாரப்படவேண்டும்.

அதற்கு நிச்சயம் நான் உதவி செய்வேன் என அவர் கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions