ஸ்படிகம் இயக்குனரின் அடுத்த ஹீரோ பிருத்விராஜா? துல்கரா..?

Bookmark and Share

ஸ்படிகம் இயக்குனரின் அடுத்த ஹீரோ பிருத்விராஜா? துல்கரா..?

மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 20 வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும்.

அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரியஇயக்குனர் தான் பத்ரன். அதுமட்டுமல்ல மம்முட்டியை வைத்து 'அய்யர் தி கிரேட்' உட்பட திரையுலக வரலாற்றில் நிலைத்து நிற்கும்படியான படங்களை இயக்கியும் இருக்கிறார் பத்ரன்.

கடைசியாக இவர் மோகன்லாலை வைத்து 'உடையோன்' என்கிற படத்தை இயக்கினார்.  தற்போது பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் பத்ரன்.. ஒரு கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மானோ அல்லது பிருத்விராஜோ நடிக்கலாம் என தெரிகிறது.

இதில் ஏற்கனவே பிருத்விராஜை வைத்து 'வெள்ளித்திர' என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளதால் பிருத்விராஜ் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

அதேசமயம் மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கியுள்ள நட்பின் அடிப்படையில் மோகன்லால் கைகொடுத்தாலும் கொடுக்கலாம் என்றும் தெரிகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions