பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை

Bookmark and Share

பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பி ஆகியோர் இடையே இருந்த இடைவெளி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி இளையராஜாவின் பாடல்களை பாடாதது பலருக்கும் ஒரு வருத்தமாக இருந்தது.

தற்போது இது குறித்து அவர் செய்தி சானலுக்கு அளித்துள்ள பேட்டியில் இளையராஜாவின் பாடலை பாடாதது எனக்கும் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

அவரின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் திடீரென நோட்டீஸ் விட்டதால் நான் அவரின் பாடல்களை பாடவில்லை. மற்ற பாடல்கள் பாடினேன்.

பிரச்சனையை சால்வ் பண்ணலாமே

நான் யாரையும் தப்பு சொல்லவில்லை. அவரின் பாடல்கள் பாடமுடியாமல் போகலாம். அதனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டேன்.

ஆனால் நிகழ்ச்சியை இது பாதிக்கவில்லை. மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடிய பாடல்களை பாடினேன். எல்லோரும் வந்தார்கள்.

ஏன் இதுபோன்ற ஒரு விவகாரம் வந்ததென்று எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள். எந்த பாடலையும் நான் என் சொந்தம் என நினைத்து கிடையாது. நான் தலை வணங்கி தான் செல்கிறேன்.

நாங்கள் இருவரும் சேர்வோம் என்பதை காலம் நிர்ணயம் செய்யும். மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை என நடத்த முன்பே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நடக்கும் போது இளையராஜாவிடமிருந்து இது போன்ற ஒரு நோட்டீஸ் வந்தது எதிர்பாராதது.

என்னை சிலர் இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசி பிரச்சனையை சால்வ் பண்ணலாமே என கேட்டனர்.

ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன்மானம் என்ற ஒன்று உண்டு. அவரின் இசையில் நான் இதுபோல பல நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறேன். படத்திலும் பாடியிருக்கிறேன்.

பாடல் மேல் சத்தியம்

நிகழ்ச்சியை நடத்துபவர்கள் IPRS அமைப்புக்கு ஒரு தொகையை செலுத்திவிடுவார்கள். அதன் மூலம் பாடல் சம்மந்தபட்டவர்களுக்கு ராயல்டி போய் சேரும். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் அதை மட்டும் கேட்டு உறுதி செய்துவிடுவேன்.

ஆனால் ராஜா சார் காப்பி ரைட்ஸ் வாங்கி இருக்கிறார் என்பது எனக்கு தெரியவே தெரியாது. அவரும் என்னிடம் சொன்னதில்லை.

தெரிந்திருந்தால் நான் உடனே அவரிடம் போன் செய்து அனுமதி வாங்கியிருப்பேன். இதில் எனக்கு கர்வமோ, கூச்சமோ கிடையாது.

இது நான் பாடும் பாடல் மேல் சத்தியம் என அவர் கூறினார்.


Post your comment

Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions