யூ டியூப்பில் வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட காட்சிகள்

Bookmark and Share

யூ டியூப்பில் வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட காட்சிகள்

24வது ஜேம்ஸ் பாண்ட் படம் ஸ்பெக்ட்ரா. சோனி பிக்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஸ்கைஃபால் புகழ் டேனியல் கிரெய்க் நடிக்கிறார். பிரான்ஸ் நடிகை லியா சேடூக்ஸ் ஹீரோயின், மிஸ்டர் ஹிங்ஸ் பட ஹீரோ தவே பாடிஸ்டா வில்லன்.

இந்தப் படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவராமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது முதன் முறையாக ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் பனி மலையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒண்றை நிமிடம் ஓடும் அந்த காட்சிகளே புதிய ஜேம்ஸ் படத்தின் பிரமாண்டத்தை உணர்த்துகிறது. படத்தின் இயக்குனர், கேமரா மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் சில விநாடிகள் பேசுகிறார்கள்.

இறுதியாக, டேனியல் கிரெய்க் எதிரிகளை ஸ்டைலாக சுட்டுக் கொண்டே செல்லும் காட்சிகளுடன் நிறைவடைகிறது. படம் வருகிற நவம்பர் மாதம் 6ந் தேதி வெளிவருகிறது.

முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்கைஃபால் 1029 கோடி வசூலித்து ஜேம்ஸ் பட வசூல்களில் முதல் இடத்தை பிடித்தது. ஸ்பெக்ட்ரா அதனை முறியடிக்கும் என்கிறார் இயக்குனர் சாம் மெண்டில்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions