என் பட கதையை யாராலும் காப்பியடிக்க முடியாது: தொடையைத் தட்டும் இயக்குனர்

Bookmark and Share

என் பட கதையை யாராலும் காப்பியடிக்க முடியாது: தொடையைத் தட்டும் இயக்குனர்

தனது கதையை யாராலும் காப்பியடிக்கவே முடியாது என்று ஸ்பெக்டர் எனும் ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குனர் சாம் மென்டீஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரைக் நடித்து வரும் பாண்ட் படம் ஸ்பெக்டர்.

24வது ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரை சாம் மென்டீஸ் இயக்கி வருகிறார். இதில் கவர்ச்சி நாயகி மோனிகா பெலுச்சி நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயான் பிளெமிங் எழுதிய நாவலைத் தழுவி ஸ்பெக்டர் படத்தை எடுத்து வருகிறார்கள்.மாஃபியா ஏஜென்சி நடத்தி வரும் வில்லன் உலக நாடுகளின் ராணுவத்திற்கே தண்ணீர் காட்டுகிறார். வில்லனை ஸ்பெக்டர் என்ற ஏஜென்சி நடத்தி வரும் நம்ம பாண்ட் கிரேக் எப்படி அடக்குகிறார் என்பது கதை.

ஜேம்ஸ் பாண்ட் தனியாக ஏஜென்சி வைத்துள்ளாரா, அவர் இங்கிலாந்தின் ரகசிய போலீஸாக அல்லவா இருந்தார் என்று கேட்பவர்களுக்கு படத்தில் பதில் உள்ளதாம்.வழக்கம் போல இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் சிலு சிலு காதல், பரபர சண்டை, சேசிங் காட்சிகள் உள்ளதாம்.

ஆனால் சாம் மென்டீஸ் மசாலாவை கொஞ்சம் தூக்கலாக சேர்த்துள்ளாராம். அண்மையில் ஹேக்கர்கள் சோனி நிறுவன கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தபோது ஸ்பெக்டர் கதையும் சுடப்பட்டது. ஆனால் சாம் மென்டீஸோ கொஞ்சமும் பதட்டம் அடையாமல் தனது கதையை யாராலும் திருட முடியாது. அவர்கள் ஹேக் செய்தால் என்ன என்று கூலாக கேட்கிறார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions