பிரமாண்ட வெடிப்பு - 'ஸ்பெக்டாக்குலர்' ஸ்பெக்டர்

Bookmark and Share

பிரமாண்ட வெடிப்பு - 'ஸ்பெக்டாக்குலர்' ஸ்பெக்டர்

ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே சாதனைக் குவியல்தான் அதிகமாக இருக்கும். தொட்டதெல்லாம் சாதனை என்பதுதான் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரலாறு. அந்த வரலாற்றை லேட்டஸ்ட் படமான ஸ்பெக்டரும் தொடர்ந்துள்ளது.

ஸ்பெக்டர் படத்தின் ஒரு ஆக்ஷன் காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலக திரைப்பட வரலாற்றில் இடம் பெற்ற மிகப் பிரமாண்டமான வெடிக் காட்சி இது என்று கின்னஸ் அமைப்பு கூறியுள்ளது.

மிக நீளமான வெடிப்பு 

உலக சினிமாக்களிலேயே இதுதான் மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்று இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பாண்ட் படங்களில் 24வது படம்தான் ஸ்பெக்டர்.

8418 லிட்டர் மண்ணெண்ணெய் 

இந்தக் காட்சியில் 8418 லிட்டர் மண்ணெண்ணெய், 33 கிலோ வெடி பொருள் பவுடர் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த அளவையும் கணக்கிட்டால் அது 68.47 டன் டிஎன்டி வெடிபொருளுக்கு சமமாகுமாம்.

ஆனால் இந்த பிரமாண்ட வெடிகுண்டு வெடிப்பை படத்தில் வெறும் 7.5 விநாடிதான் காண முடியும். அதற்குத்தான் இத்தாம் பெரிய வெடிப்பை அரங்கேற்றி பிரமாண்டப்படுத்தியுள்ளனர் ஸ்பெக்டர் குழுவினர்.

கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை பட நாயகன் டேணியல் கிரேக், லியா செய்டோ, தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions