மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

Bookmark and Share

மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சனா யாடிரெட்டி இயக்கும் இந்தப்படம், ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகிறது.

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் நடிக்க உள்ள இப்படம் செப்டம்பரில் தொடங்கி 6 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக யாடி ரெட்டி இன்று தெரிவித்தார். இப்படம் 14 இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

தென்னிந்தியாவில் தனக்கு இது முதல் படம் என்று கூறிய ஸ்ரீசாந்த், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிப்புத்துறையில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருப்பதாக கூறுகிறார்.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions