நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்

Bookmark and Share

நாளை ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். அடுத்து ‘சிகா ‘ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’, பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி’, கே.வி.கன்னியப்பன் தலைமையில் 'ஆண்டவர்அணி’ என்று 3 அணிகள் போட்டியிடுகின்றன.

ஒளிப்பதிவாளர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200. இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.

சங்கத்தின் வரவு செலவுகள் முறையாக நடக்க வேண்டும், வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். என்று கோரிக்கை உள்ளது. போட்டியிடுவோர் நேர்மையான நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும்.

முறையான ஊதிய உயர்வுக்கு வழி செய்யப்படும். ஒழுங்கு நடவடிக்கையில் வெளிப்படையான முறை கொண்டு வரப்படும். காப்பீடு, விபத்து இழப்பீடு முறைப்படுத்தப்படும் தொழில் நுட்ப அறிவு மேம்படுத்தப்படும்.

‘சிகா’வுக்கென ஒரு ஆப் அப்ளிகேஷன் ஏற்படுத்தப்படும். பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். கேமரா எக்ஸ்போ நடத்தப்படும். சொந்தமாக கட்டடம் கட்டப்படும். ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும்.

அரசு உதவியுடன் பல சேவைகள் தொடங்கப்படும் என்று பல்வேறு வாக்குறிதிகளையும் அளித்துள்ளனர். தேர்தல் நாளை காலை 8 மணி முதல் 4 மணி வரை வடபழனி இசை கலைஞர்கள் சங்கத்தில் நடக்கிறது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணையும் இந்திய பிரபலம்!
ஒளிப்பதிவாளர்கள் சங்க தேர்தல்: 3 அணிகள் மோதல்
எம்.எஸ்.விக்கு சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி
ஐ படம் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளேன்: பி.சி.ஸ்ரீராம்
படம் இயக்குவதை கைவிட்டார் பி.சி.ஸ்ரீராம்
எமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்று அழைக்கும் பி.சி.ஸ்ரீராம்
தன் தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் ஸ்ரீராம்..!
இயக்குநர் சங்கரும் ஒளிப்பதிவார் பி.சி.ஸ்ரீராமும் மோதல் - ஐ படப்பிடிப்பில் பரபரப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions