
தென்னிந்திய திரை உலகையும் தாண்டி பாலிவுடில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகை ஸ்ரீதேவி, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளிவந்த இங்லீஷ் விங்லீஷ் திரைப்படத்தில் அவரது அசத்தலான நடிப்பு, தமிழ் தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் புலி படத்தில் நடிகை ஸ்ரீதேவி ராணியாக நடித்து வருகின்றார். அதிலும் அப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகளைக் காட்டிலும் நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரதிற்கு தான் அதிக முக்கியத்துவமும், அதிக சம்பளமும் என்று கூறப்படுகின்றது.
நடிகை ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை பாலிவுட்டில் நயாகியாக அறிமுகப் படுத்தவுள்ளார். இதற்காக நடன பயிற்சிகளும், நடிப்பு பயிற்சிகளுக்கும் கற்று வரும் ஜான்வி, தனது அம்மா ஸ்ரீதேவியுடன் சித்தூரில் உள்ள காளஹஸ்தி ஆலயத்திற்கு வந்துள்ளார். கோவிலில் ஜான்விக்காக ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் நடைபெற்றுள்ளன.
Post your comment