ஸ்ரீதேவியை மறுத்த ராஜமவுலி !

Bookmark and Share

ஸ்ரீதேவியை மறுத்த ராஜமவுலி !

இந்திய அளவில் மெகா பட்ஜெட்டில் சரித்திர கதையில் உருவான பாகுபலி படத்தின் பிரமாண்டம் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

படத்தின் இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய கதாப்பாத்திரங்களை அருமையாக வடிவமைத்திருந்தார். குறிப்பாக, கவர்ச்சி நாயகி தமன்னாவை புரட்சி பெண்ணாகவும், ரம்யாகிருஷ்ணனை அவருக்கே உரிய மிரட்டலான வேடத்திலும் நடிக்க வைத்தார். 

அவர்களுடன் பிரபாஸ், அனுஷ்கா, ராணா போன்றோருக்கும் கச்சிதமான வேடங்கள் கிடைத்திருந்தன. அப்படி பலரது திறமையில் உருவான ராஜமவுலியின் பாகுபலி 50 நாட்களை கடந்து இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்துள்ளது.

இந்த நிலையில், பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த வேடத்தில் முதலில் ஸ்ரீதேவியை அணுகிய போது அவர் 5 கோடி சம்பளம் கேட்டதால், பட்ஜெட் தாங்காது என்பதால் ராஜமவுலி மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. 

இப்[பொழுது பாகுப்லி வெற்றிகரமாக ஓடியபோது, நல்ல வாய்ப்பை இழந்து விட்டேன் என்று பீல் பண்ணிய ஸ்ரீதேவி பாகுபலி-2 வில் நடிக்க ராஜமவுலியை அணுகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் இப்போது, தன்னிடம் சான்ஸ் கேட்ட ஸ்ரீதேவியிடம், முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். படத்தில் உங்களுக்கேற்ற வேறு கேரக்டர்கள் எதுவும் இல்லை என்று ராஜமவுலி கூறிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions