இளவட்டங்களை ஓரங்கட்டிய ஸ்ரீதேவி!

Bookmark and Share

இளவட்டங்களை ஓரங்கட்டிய ஸ்ரீதேவி!

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை அடுத்து ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் புலி. இந்த படத்தில் ஒரு தேசத்து ராணியாக அவர் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக கதாநாயகிகளைப்போன்று தானும் உடல் எடையை குறைத்து விட்டு நடிக்கும் ஸ்ரீதேவி, ஒரு முத்தக்காட்சியில் நடித்திருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக ஸ்ரீதேவிக்குத்தான் முக்கியமான வேடம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், இரண்டு மாதங்களாக ஈசிஆர் சாலையில் உருவாக்கப்பட்டிருந்த அரண்மனை செட்டில் நடந்த படப்பிடிப்பில் ஸ்ரீதேவி சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமாக படமாக்கப்பட்டதாம்.

மேலும், புலி படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என்ற இரண்டு முன்னணி கதாநாயகிகள் இருந்தபோதும், அவர்களுக்கு பாடல் காட்சிகளில் வந்து செல்லும் வழக்கமான கதாநாயகி வேடங்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதிலும் ஸ்ரீதேவியின் மகளாக வரும் ஹன்சிகாவுக்கு விஜய்யுடன் ஒன்சைடு காதல் பாடல் மட்டும்தான் உள்ளதாம். மற்றபடி சில காட்சிகள்தானாம். அந்தவகையில், மேற்படி இரண்டு இளவட்ட நடிகைகளுமே மாஜி ஹீரோயினான ஸ்ரீதேவி ஓரங்கட்டி விட்டாராம். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை படத்தில் தூக்கலாக வைத்துள்ளாராம் இயக்குனர் சிம்புதேவன்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions