மூன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் 'மதர்'

Bookmark and Share

மூன்று மொழிகளில் ஸ்ரீதேவி நடிக்கும் 'மதர்'

திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்த நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் மூலம் நடிக்க வந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் விஜய் நடிக்கும் 'புலி' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஸ்ரீதேவி நடித்து வருகிறார்.

தமிழில் சுமார் 29 வருடங்கள் கழித்து நடிக்க வந்துள்ள ஸ்ரீதேவி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

பல விளம்பரப் படங்களை இயக்கிய ரவி உதய்வார் என்பவர் 'மதர்' என்ற படத்தை இயக்க உள்ளார். ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளாராம்.

ஒரு தாய்க்கும், மகளுக்கும் இடையே உள்ள பாசம்தான் படத்தின் கதையாம். மகளாக கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் புதுமுகம் ஒன்றை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions