ஸ்ரீதேவியின் நல்ல பழக்கம்...

Bookmark and Share

ஸ்ரீதேவியின் நல்ல பழக்கம்...

டிஜிட்டல் யுகம் வந்த பிறகு படப்பிடிப்புத் தளங்களில் டிஜிட்டல் கேமராவில் படம் பிடிக்கப்படும் காட்சிகளை அப்போதே பார்த்துக் கொள்ளும் வசதி தற்போது வந்துவிட்டது.

அடுத்த வினாடியே நாம் எடுத்த காட்சி எப்படி இருக்கிறது என்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். வெறுமனே தலை காட்டி நடிப்பவர்கள் கூட இயக்குனருக்குப் பின்னால் நின்று கொண்டு தான் எப்படித் தெரிகிறோம் என்று எட்டிப் பார்க்கும் வழக்கம் இப்போது உள்ளது.

ஆனால், அந்தக் காலத்தில் படமாக்கப்படும் காட்சிகளை லேப்பில் சென்று பிராசசிங் செய்த பிறகு மட்டும்தான் பார்க்க முடியும். இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள் தவிர மற்றவர்கள் டப்பிங் பேசும் போது மட்டுமே அவர்கள் காட்சி எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்.

'புலி' படத்தில் கலந்து கொண்டு நடித்து வரும் முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி, தான் நடித்த காட்சிகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கும் வசதி வந்துள்ள இந்தக் காலத்திலும் தான் நடித்த காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளவில்லையாம்.

ஒளிப்பதிவாளர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாராம். தப்பித் தவறி ஒரு நாள் கூட அவர் தான் நடித்த காட்சிகளை உடனுக்குடன் பார்க்க ஆசைப்பட்டதே இல்லையாம்.

இந்தக் காலத்தில் இப்படி இருக்கிறாரே என ஸ்ரீதேவியின் தொழில் பக்தியைக்  கண்டு 'புலி' யூனிட்டாரே பாராட்டித் தள்ளுகிறார்களாம். படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசனை விட ஸ்ரீதேவி மிக அழகாக இருக்கிறார் என மற்றொரு பக்கம் அவரின் தோற்றத்திற்கும் பாராட்டு மழை பொழிகிறார்களாம்.  

படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர் பல பாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சுப்பிரமணியம். எப்படியும் இவர் தன்னை இன்னும் அழகாகததான் காட்டுவார் என ஸ்ரீதேவிக்கு அவ்வளவு நம்பிக்கை போலிருக்கிறது.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions