இப்படி ஒரு ரீ என்ட்ரிக்காகத்தான் காத்திருந்தேன்: ஸ்ரீதேவி

Bookmark and Share

இப்படி ஒரு ரீ என்ட்ரிக்காகத்தான்  காத்திருந்தேன்: ஸ்ரீதேவி

புலி படம் வெளிவரும் வரை அதைப் பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்திகள் வந்து கொண்டுதானிருக்கும். டீசருக்குக் கிடைத்த வரவேற்பு படக் குழுவினரை நிறையவே மகிழ வைத்துவிட்டதாம். வெறும் டீசருக்கு, இரண்டு நாட்களில் 20 லட்சம் யூடியூப் ஹிட்ஸ் கிடைத்த நிலையில் தற்போது 30 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஃபேன்டஸியான சரித்திரக் கதையாக தயாராகியுள்ள புலி படத்திற்கும், விரைவில் வெளிவர இருக்கும்  பாகுபலி படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது, சொல்லப் போனால்  பாகுபலி படத்தையும் விட புலி படத்தை மிரட்டலாகவே தயாரித்துள்ளோம் என  புலி படக்குழுவினர் தெரிவிக்கிறார்களாம்.

இந்தப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோரது கதாபாத்திரங்களை விட ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் மிகவும் ஹைலைட்டாக இருக்குமாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இந்தப் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியுள்ள ஸ்ரீதேவி, ஹீரோயினாக நடிக்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறாராம்.

ஏறக்குறைய ஒரு அரசி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கான உடைகளுக்காக மட்டுமே சில பல லட்சங்களைச் செலவு செய்துள்ளார்களாம். படத்தில் ஸ்ரீதேவி சண்டை போடும் காட்சிகள் கூட இருக்கிறதாம்.

மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், தமிழில் இப்படி ஒரு ரீ-என்ட்ரிக்காகத்தான் நான் காத்திருந்தேன் என ஸ்ரீதேவியே படப்பிடிப்பு முடிந்ததும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாராம். 

இந்தப் படம் மூலம் ஸ்ரீதேவிக்கு தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து பல வாய்ப்புகள் வரும். அவரை மையமாக வைத்தும் கூட பல கதைகள் உருவாகும் என்கிறார்கள். தெலுங்கிலும் 'புலி' படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions