ஆசையை நிறைவேற்றும் ஸ்ரீதிவ்யா!!

Bookmark and Share

ஆசையை நிறைவேற்றும் ஸ்ரீதிவ்யா!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி ஸ்ரீதிவ்யாவை பேச வைத்தது. ஆனால் அதையடுத்து ஜீவா, வெள்ளக்கார துரை படங்களில் நடித்திருந்தார். அந்த படங்கள் சுமாரான ஹிட்டாகத்தான் அமைந்தது.

அவர் ஏற்கனவே நடித்த பென்சில், ஈட்டி என்ற இரண்டு படங்களுமே இன்னும் திரைக்கு வராமல் உள்ளன. இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படத்தை அவர் மலைபோல் நம்பியிருந்தார்.

ஆனால் படம் எதிர்பார்த்த ஹிட்டடிக்கவில்லை. அதனால் அடுத்து மேல்தட்டு ஹீரோக்களை எட்டிபிடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஸ்ரீதிவ்யாவின் திட்டம் எதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை.

இருப்பினும், இந்த வேகத்தில் பிரபல ஹீரோக்களுடன் நடித்தால்தான் உண்டு, இல்லையேல் எல்லாம் கனவாகி விடும் என்று யோசித்த ஸ்ரீதிவ்யா, தற்போது கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படத்தில் நயன்தாராவே மெயின் ஹீரோயினாக நடிக்க, இரண்டாவது நாயகி போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

அதுமட்டுமின்றி, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் நடிக்கும் படங்களில் அவர்களைவிட சிறிய வேடம் என்றாலும் நடிக்கத்தயாராக இருப்பதாக கூறி வரும் ஸ்ரீதிவ்யா, அவர்களுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது ஆசையை இதன்மூலம் நான் நிறைவேற்றிக்கொள்கிறேன் என்றும் கூறுகிறார். 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions