சில்லி கொடுக்கா... இது சாப்பாட்டு பேர் இல்லைங்க... நம்ம ஸ்ரீதிவ்யாவோட செல்லப் பேர்!

Bookmark and Share

சில்லி கொடுக்கா... இது சாப்பாட்டு பேர் இல்லைங்க... நம்ம ஸ்ரீதிவ்யாவோட செல்லப் பேர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் வருத்தப் படாமல் தமிழ் ரசிகர்களின் மனதில் குடி புகுந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகி என்ற இடத்தைப் பிடித்தார் திவ்யா.

விக்ரம்பிரபு ஜோடியாக அவர் நடித்த வெள்ளைக்கார துரையும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது. விரைவில், மீண்டும் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக காக்கிச்சட்டைப் படத்தில் நடித்துள்ளார் இவர்.

விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சிவகார்த்திக்கேயன் ‘மியாவ்' என்றே செல்லமாக திவ்யாவை அழைப்பார். இந்நிலையில், நிஜத்தில் தனது செல்லப் பெயர்கள் குறித்து மனம் திறந்துள்ளார் திவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் மட்டுமில்லையாம். நிஜத்திலும் கடந்த பத்து வருடங்களாக திவ்யாவை அவரது பெற்றோர் மியாவ் என்று தான் செல்லமாகக் கூப்பிடுகிறார்களாம்.

மியாவ் மட்டுமின்றி திவ்யாவுக்கு இன்னும் இரண்டு செல்லப்பெயர்களும் இருக்கிறதாம். அதில் ஒன்று ‘திவாய்'. அதாவது திவ்யா என்பது சுருக்கம் தான் இந்த திவாய்.

மற்றொரு செல்லப்பெயர் ‘சில்லி கொடுக்கா'. அதாவது, திவ்யாவை அவரது வீட்டில் எல்லாரும் பையன் போன்று தான் வளர்த்தார்களாம். அதனால், சின்னப்பையன் எனப் பொருள் படும் வகையில் ‘சில்லி கொடுக்கா' என செல்லமாக அழைப்பார்களாம்.

சந்திரமுகில ஜோதிகா திட்ற மாதிரி இருந்தாலும், இந்த ‘சில்லி கொடுக்கா'வும் நல்லா தான் இருக்கு... மியாவ் !


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions